செய்திகள்
இரு சக்கர வாகன உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மானியம் வழங்க அரசு உத்தரவு
தமிழகத்தில் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல புதிய திட்டங்கள் அறிவித்து வருகிறது.
அதன் படி சில தினங்களுக்கு முன்பாக சென்னை மாநகரம் முழுவதும் இரு சக்கர வாகன ஊழியர்கள் ஓய்வெடுக்க அறைகளை அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஓய்வெடுக்கும் அறைகளில் ஏ.சி மற்றும் ஊழியர்கள் தங்கள் போனை சார்ஜ் செய்து கொள்ள வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் 2000 உணவு டெலிவரி ஊழியர்கள் e-scooter எனப்படும் மின்சார இருசக்கர வாகனம் வாங்குவற்காக மானியம் வழங்க அரசு திட்டமிட்டிருந்தது.
அதன்படி ஒரு டெலிவிரி ஊழியருக்கு ரூ.2000 வரை மானியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து மானியம் பெற்று கொள்ளலாம். இதனை நடைமுறைபடுத்துவதன் மூலம் பல டெலிவரி ஊழியர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த மானியம் ஆன்லைன் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், சொமேட்டோ, மீசோ போன்ற வேறு சில நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















