வணிகம்
ஆகஸ்ட் 1 முதல் புதிய வங்கி சட்டங்கள் அமல் – வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்!

2025 ஆகஸ்ட் 1 முதல் புதிய வங்கி சட்டங்கள் அமலுக்கு வருகிறன: முக்கிய திருத்தங்கள் இதோ!
இந்திய அரசு 2025 ஆகஸ்ட் 1 முதல் புதிய வங்கிச் சட்ட திருத்தங்களை நடைமுறையில் கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த சட்ட மாற்றங்கள், பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்க நோக்கமுடையதாகும்.
நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2025” என்ற பெயரில் ஐந்து முக்கிய வங்கி சட்டங்களில் மொத்தம் 19 திருத்தங்கள் கொண்டுள்ளன:
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949
பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம், 1955
வங்கி நிறுவனங்கள் கையகப்படுத்துதல் சட்டம், 1970
நிறுவனங்களை மாற்றுதல் சட்டம், 1980
ஜூலை 29, 2025 அன்று வெளியான அரசிதழ் படி, இதில் உள்ள முக்கிய பிரிவுகள் (3, 4, 5, 15-20) ஆகஸ்ட் 1 முதல் அமலில் வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முக்கிய மாற்றங்கள்:
கணிசமான வட்டி வரம்பு: இதுவரை ₹5 லட்சமாக இருந்தது, இப்போது ₹2 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது 1968க்கு பிறகு முதன்முறையாக மாற்றப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகள்: இயக்குநர்களின் பதவிக்காலம் (தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர்கள் தவிர) 8 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் ஆக உயர்த்தப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகள்:
உரிமை கோரப்படாத பங்குகள், வட்டி மற்றும் பத்திர மீட்பு தொகைகள் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.
நிறுவன சட்டங்கள் போல செயல்படும் விதமாக நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
தணிக்கையின் தரம்:
தணிக்கையாளர்களுக்கான ஊதியத்தை சட்டபூர்வமாக நிர்ணயிக்கும் அனுமதி.
உயர் தர தணிக்கை நிபுணர்களை நியமிக்க அதிகாரம்.
நம்பகமான கணக்குப் பார்வை அமைப்பை உருவாக்கும் முயற்சி.
இந்த மாற்றங்கள் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நம்பிக்கையை அதிகரிக்கவும், முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு தரங்களை உயர்த்தவும் அடித்தளமாக அமையும்.
















