வணிகம்
2026ம் ஆண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! 8வது ஊதியக்குழு பயன்கள் உங்களுக்கே!

சென்னை:
8வது ஊதியக்குழு (8th Pay Commission) தொடர்பான முக்கிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1ம் தேதி தொடங்க வேண்டிய இந்த ஊதிய அமைப்பு தாமதமாக அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது retire ஆக உள்ள அரசு ஊழியர்களிடையே பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 1க்கு பின் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு என்ன நடக்கும்?
இக்கேள்விக்கு தற்போது அரசு தரப்பிலிருந்து உறுதியான விளக்கம் வந்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி 1ம் தேதிக்கு பின் ஓய்வு பெறும் அனைத்து அரசு ஊழியர்களும் 8வது ஊதியக்குழுவின் கீழ் நிர்ணயிக்கப்படும் புதிய ஊதிய மற்றும் பென்ஷன் சலுகைகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, அந்த அடிப்படையிலேயே அவர்களுக்கு பலன்கள் வழங்கப்படும்.
வீட்டு கடன் சலுகைகள்:
பதிலாக, 7வது ஊதியக்குழுவில் வழங்கப்பட்ட வீட்டு கடன் 25 லட்சம் வரை 7.44% வட்டியுடன் இருந்தது. ஆனால் 8வது ஊதியக்குழு அமலில் வந்த பிறகு, இது 30 லட்சம் அல்லது அதற்கு மேல் உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட்டி சதவிகிதம் நிலைத்திருக்கலாம்.
விடுமுறை நன்மைகள்:
8வது ஊதியக்குழு மூலமாக ஊழியர்களுக்கு புதிய விடுமுறை அதிகரிப்பு நன்மைகள் கிடைக்கும்.
ஈட்டிய விடுப்பு (Earned Leave): 30 நாட்களிலிருந்து 35 நாட்களுக்கு உயர வாய்ப்பு.
பாதி சம்பள விடுப்பு: 20 நாட்கள் → 25 நாட்கள்.
தற்செயல் விடுப்பு (Casual Leave): 8 நாட்கள் → 10 நாட்கள்.
அதிகரித்த அரசு விடுமுறைகள்: தேசிய, மாநில மற்றும் அரசிதழில் அறிவிக்கப்பட்ட 19 நாட்கள் விடுமுறை தொடரும்.
ஊதியம் & பென்ஷன் உயர்வு:
ஊழியர்களின் சம்பளம் 180% முதல் 210% வரை உயரலாம்.
பென்ஷன் 100% வரை உயர வாய்ப்பு.
அகவிலைப்படி பிட்மென்ட் காரணி (DA fitment factor) 2.57 இல் இருந்து 2.7 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
ஊழியர் சங்க கோரிக்கைகள்:
8வது ஊதியக்குழுவில் 18 அம்ச கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படும் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஆலோசகர்கள், தலைவர் உள்ளிட்ட 42 காலியிடங்களுக்கான நியமனத்தை நிறைவு செய்யும் நடவடிக்கையில் உள்ளது.

















