செய்திகள்
ரூ.2,000 நோட்டுகள் மீண்டும் திரும்ப பெறப்பட்டன – ரிசர்வ் வங்கியின் புதிய தகவல்!

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு: ரூ.2,000 நோட்டுகள் 98.26% திரும்பப் பெறப்பட்டது!
2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள், 2023 மே 19ஆம் தேதி புழக்கத்திலிருந்து மாற்றப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு இந்தியா போஸ்ட் மூலம் தபால் நிலையங்கள் வழியாகவும் இந்த நோட்டுகளை அனுப்பி வைப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியான புதிய தகவலின்படி, ரூ.2,000 நோட்டுகள் 98.26% வரை திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மே 2023-ல் புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில், தற்போது நவம்பர் 29, 2024 நிலவரப்படி, வெறும் ரூ.6,181 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதனால், ரூ.6,839 கோடி அளவிற்கு இந்த நோட்டுகள் புழக்கத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
