Connect with us

தமிழ்நாடு

கொல்லைப்புற மெஜாரிட்டி; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் ஆவேசம்!

Published

on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சபாநாயகர் தனபால் கொல்லைப்புற மெஜாரிட்டி தேடித் தரக் கூடாது. அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் நேற்று சபாநாயகர் தனபாலை சந்தித்து தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூன்று பேர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

இந்த மூன்று பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று அவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பலாம் என அரசியல் வட்டாரம் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அதிமுக ஆட்சி தொடர மத்தியில் உள்ள பாஜக அரசும், ஆளுநரும் சட்டவிரோதமாக அனுமதித்தனர்.

பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதிமுக ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது. முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டதால் வருகின்ற மே 19-ஆம் தேதி மீதியுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால், சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து பேரவைத் தலைவரை சந்தித்து இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக் கொடுத்திருக்கிறார்கள்.

22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அதிமுக அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. பேரவைத் தலைவரைப் பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர்களை எச்சரித்துள்ளது.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. ஓ.பன்னீர் செல்வமும் அவருடன் முதலமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் பேரவைத் தலைவர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு கொல்லைப்புற வழியாக மெஜாரிட்டி தேடித்தர முயலக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்8 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. Find the premium private yacht charter or bareboat that fits your specifications. baku private drivers.