ஆன்மீகம்
2025 அக்னி நட்சத்திரம் நாளைத் தொடங்குகிறது! இப்போது சுபகாரியங்கள் செய்யலாமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?

அக்னி நட்சத்திரம் 2025: வெயில் கொளுத்தும் காலம் தொடங்குகிறது – சுபகாரியங்கள் செய்யலாமா?
2025-ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் காலம் மே 11 முதல் மே 28 வரை இருக்கிறது. வெயில் அப்பட்டமாகும் இந்த நாட்களில், பலர் வீட்டில் சுபகாரியங்கள் நடத்தலாமா, சொத்துக்கள் வாங்கலாமா என குழப்பமடைகிறார்கள். இதற்கு ஜோதிடச் சாஸ்திரம் தெளிவான விளக்கமளிக்கிறது.
சூரியன் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தின் 3-ஆம் பாதத்தில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்து ரோகிணி நட்சத்திரத்தின் 2-ஆம் பாதம் வரை பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படும். இது வெப்பம் உச்சத்தில் இருக்கும் காலம் மட்டுமல்ல, சக்தி அதிகமாகவும் இருக்கும் காலம்.
இந்த காலப்பகுதியில்:
சொத்து வாங்குதல், கிரகப்பிரவேசம், வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குவது போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.
தவிர்க்க முடியாத திருமணங்கள் மட்டும் நடத்தியால் பரவாயில்லை. இருப்பினும் அவையும் தவிர்ப்பதே சிறந்தது என ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சமாதான பேச்சுவார்த்தைகள், சொத்து தொடர்பான வழக்குகள், நீதி சம்பந்தப்பட்ட காரியங்கள் போன்றவை முடித்து விட எளிதாக இருக்கும்.
சூரியன் உச்ச நிலையில் இருப்பதால், புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
அசைவ உணவுகளை தவிர்த்து, முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும்.
சுற்றுலா, பயணங்கள் போன்றவையும் தவிர்க்கவும் சிறந்தது.
இந்த வெயில் காலத்தில் மன அமைதி, உடல் நலம் காக்கும் வழிபாடுகள் மற்றும் ஒழுங்கான வாழ்வுமுறையே நமக்குத் தேவையான பாதுகாப்பு!




