ஆன்மீகம்
குரு பெயர்ச்சி 2025: இந்த 5 ராசிகளுக்கு பணம், புகழ், செல்வம் பெருகும் அதிர்ஷ்ட காலம்!

குரு பெயர்ச்சி 2025:
மே 14ஆம் தேதி 2025 அன்று, குரு பகவான் ரிஷப ராசியை விட்டு மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த முக்கியமான ஜோதிட நிகழ்வு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், செல்வம் ஆகியவை பெருகும் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.
இந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதைக் காணலாம்:
🔹 மேஷம்:
குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வழங்கும். குடும்பத்தில் செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எழுத்துத்துறை, ஊடகத் துறையில் உள்ளவர்கள் பெரிய வெற்றிகளை அடைவார்கள். ஆன்மீகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேலோங்கும்.
🔹 கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, புதிய வேலையின்பெரும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுப்பெறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெருகும். நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும்.
🔹 துலாம்:
துலா ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பார்கள். சொத்து முதலீடுகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவுடன் புதிய முயற்சிகள் தொடங்கலாம்.
🔹 கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு குரு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். காதல் உறவுகள் வலுப்படும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
🔹 மீனம்:
மீன ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுப்படும். தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
அதிர்ஷ்டத்தை அதிகரிக்க:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரா…’ மந்திரத்தை தினமும் பாராயணம் செய்தால் குரு பகவானின் அருள் பெறலாம்.




