ஆரோக்கியம்
தோசை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?

தோசையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் எடை குறைப்பில் அதன் பயன்!
தோசை, தென் இந்தியாவின் பிரபலமான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். ப்ரோபயாட்டிக் உணவாகவும், செரிமானத்தை மேம்படுத்தக் கூடியதாகவும் தோசை காணப்படுகிறது. குறிப்பாக, வீட்டில் சமைத்து சாப்பிடும் தோசை, சரியான முறையில் பயன்படுத்தினால், உடல் எடையை குறைக்கவும் உதவும். இந்த கட்டுரையில், தோசையின் ஊட்டச்சத்து மற்றும் எடை இழப்புக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காணலாம்.
தோசையின் முக்கிய ஊட்டச்சத்து மதிப்புகள்
ஒரு சாதா தோசை சுமார் 168 கலோரிகள் கொண்டது. இதில்,
- கார்போஹைட்ரேட் – 29 கிராம்
- புரதம் – 4 கிராம்
- கொழுப்பு – 3.7 கிராம்
- நார்ச்சத்து – 1 கிராம்
- சோடியம் – 94 மி.கி
- பொட்டாசியம் – 76 மி.கி
- வைட்டமின்கள் – A, C
- கால்சியம், இரும்புச் சத்து – போதுமான அளவில் உள்ளது.
எடை குறைக்க தோசை எப்படி உதவும்?
- தோசை புளிக்க வைக்கப்பட்ட மாவால் தயாரிக்கப்படுவதால் செரிமானத்திற்கு உதவும்.
- அதிக புரதச்சத்து கொண்டது என்பதால் வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருக்கும், தேவையற்ற உணவுகளை அதிகம் உண்பதை தடுக்கும்.
- கொழுப்பு குறைவாக இருப்பதால், உடல் பருமன் கட்டுப்பாட்டில் இருக்கும்.
- உளுந்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உடல் எடையை சமமாக வைத்திருக்க உதவும்.
- கேரட், கொத்தமல்லி சேர்த்து தோசை சுடினால், கூடுதல் நார்ச்சத்து கிடைக்கும்.
எடை குறைக்க தோசையை எப்படி சாப்பிடலாம்?
ஹோட்டல் தோசைகளை தவிர்க்கவும் – அதிக எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கப்பட்டிருக்கும்.
* வீட்டில் சமைத்த தோசையை குறைந்த எண்ணெயில் சுட வேண்டும்.
* தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* அதிக புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து கிடைக்க முடக்கத்தாணி, கேழ்வரகு, கம்பு தோசை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
தோசையின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்
- செரிமானத்தை மேம்படுத்தும் – ப்ரோபயாட்டிக் உணவு என்பதால் குடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.
- உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலம் வழங்கும்.
- சர்க்கரை நோயாளிகள், எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த உணவு.
- தசை வலிமையை பாதுகாக்கும், உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.














