வணிகம்
ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி அப்கிரேட் பிளான் இப்போது ரூ.51 முதல்! முழு விவரம்!

ரிலையன்ஸ் ஜியோ அனைவருக்கும் மலிவு விலையில் 5 ஜி அணுகலை வழங்கும் புதிய “True Unlimited Upgrade” டாப்-அப் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 4ஜி அன்லிமிட்டட் பேக் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் எளிதாக 5ஜி சேவைக்கு மாற முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5 ஜி சேவையை அனைவருக்கும் மலிவு விலையில் வழங்கும் வகையில், புதிய “True Unlimited Upgrade” என்ற டாப்-அப் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் ரூ.51 என்ற மிகக் குறைந்த விலையில் தொடங்குகின்றன.

இதற்கு முன்பு, 2 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டா வழங்கும் திட்டங்கள் மூலமே ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச 5 ஜி சேவையை அனுபவிக்க முடிந்தது.
ஆனால், புதிய “True Unlimited Upgrade” டாப்-அப் திட்டங்கள் மூலம், 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா திட்டங்கள் உள்ள வாடிக்கையாளர்களும் தற்போது 5 ஜி சேவையைப் பெற முடியும்.
இந்த புதிய திட்டங்கள் ரூ.51, ரூ.101 மற்றும் ரூ.151 என மூன்று விலைகளில் கிடைக்கின்றன.
டாப்-அப் திட்டங்கள் வழங்கும் நன்மைகள்:
ரூ.51 திட்டம்: 3 ஜிபி 4 ஜி டேட்டா + இன்ஃபினிட்டி 5 ஜி டேட்டா
ரூ.101 திட்டம்: 6 ஜிபி 4 ஜி டேட்டா + இன்ஃபினிட்டி 5 ஜி டேட்டா
ரூ.151 திட்டம்: 9 ஜிபி 4 ஜி டேட்டா + இன்ஃபினிட்டி 5 ஜி டேட்டா
இன்ஃபினிட்டி எனில் முடிவில்லா அல்லது வரம்பற்ற என அழைக்கப்படும். எனவே அன்லிமிட்டட் 5ஜி டேட்டா தரவு கிடைக்கும்.
குறிப்பு:
5 ஜி சிக்னல் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே இன்ஃபினிட்டி 5 ஜி டேட்டா கிடைக்கும்.
5 ஜி சிக்னல் இல்லாத பகுதிகளில், வாடிக்கையாளர்கள் அவர்களது திட்டத்தில் கிடைக்கும் 4 ஜி டேட்டாவைப் பயன்படுத்துவார்கள்.







