Connect with us

வார பலன்

வாரபலன்: 2019 மார்ச் 3 முதல் 9 வரை

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

எதையும் கவனத்துடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும்.எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு, வீண் அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

ரிஷபம்:

முற்போக்கு சிந்தனையைக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம் அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.

பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: மஞ்சள் சாமந்திபூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

**************************************************************************************************************************************************************************************************************மிதுனம்:

உழைப்பை உறுதியாக எண்ணும் மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

கடகம்:

ஏழைகளின் குணம் அறிந்து நடக்கும் கடக ராசி அன்பர்களே!இந்த வாரம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

**************************************************************************************************************************************************************************************************************சிம்மம்:

ஆடம்பர பொருள்களின் நாட்டம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.

பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

கன்னி:

எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே! நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர். இந்த வாரம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்

பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

**************************************************************************************************************************************************************************************************************துலாம்:

சிந்தனைய சிதர விடாமல் இருக்கும் துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண் டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.

பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம்

மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

விருச்சிகம்:

வளிமையான மணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். மன குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: ருத்ர ஜெபம் செய்வதும் குருவுக்கு கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

தனுசு:

மற்றவர்களை ஆறுதல் படுத்தும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். .

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.

பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

மகரம்:

எப்போதும் சுறுசுறுப்புடன் திகழும் மகரம் ராசி அன்பர்களே! இந்த வாரம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும்.

பெண்கள் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

.

கும்பம்:

எப்போதும் புன்னகையுடன் இருக்கும் கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த வாரம். தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

பரிகாரம்: அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

மீனம்:

பிறர் கூறுவதற்கு மதிப்பளிக்கும் மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் .வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை சிறப்பாகச் செய்து மேலிடத்தில் பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

**************************************************************************************************************************************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

Translate »
Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. Tel. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.