Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார ராசிபலன்!

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்

இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கேற்ப துன்பங்கள் வந்தாலும் அதனை மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.

பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

***************************************************************************************************************************************

ரிஷபம்:

வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட ரிஷ்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

***********************************************************************************************************************************

மிதுனம்:

யானையை பூனையாக்குவதும், பூனையை யானை ஆக்குவதும் என்பது போல எந்த விஷயத்திலும் சின்னதை பெரியதாகவும், பெரியதை சிறியதாகவும் மாற்றும் கலையை அறிந்த மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கபெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

************************************************************************************************************************************

கடகம்:

என் கடமை பணி செய்து கிடப்பதே என்பது போல பிரதிபலன் எதிர்பார்க்காமல் காரியங்களை செய்யும் குணமுடைய கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு மன சோர்வு வரலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.

பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் வெள்ளி

*******************************************************************************************************************************************

சிம்மம்:

எதையும் தாங்கும் இதயம் என்பதற்கேற்றார் போல் எதைக்கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சென்னையிலுள்ள சென்ன கேசவபெருமாளை அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

**************************************************************************************************************************

கன்னி:

வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணர்ந்து வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பீர்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

*****************************************************************************************************************************************

துலாம்:

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறுபக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம்.வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண்பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பண வரத்து இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

********************************************************************************************************************************************

விருச்சிகம்:

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதற்கேற்றவாறு எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் சுப பலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரத்து அதிகப்படும்.

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பரிகாரம்: கார்த்திகை தினத்தில் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

********************************************************************************************************************************

தனுசு:

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனுசு ராசி பிறந்த அன்பர்களே, இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: சனி பக வானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

*************************************************************************************************

மகரம்:

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும்.

மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

***********************************************************************************************

கும்பம்:

வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

******************************************************************************************************

மீனம்:

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நான் செல்வதுதான் சரி என்று உறுதியாக கூறும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தவர்களை பொறுத்தவரை வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: திருக்கடையூர் அபிராமி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

**************************************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

Translate »
Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. Edu. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.