வணிகம்
8வது ஊதியக்குழு எப்போது அமல்? சம்பள உயர்வு எவ்வளவு? முழு விபரம் இதோ!
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
8வது ஊதியக்குழு பற்றிய புதிய அப்டேட் – ஊதிய உயர்வு எப்போது? எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கிடைத்த தகவலின் படி, ஆகஸ்ட் 2025 மாதத்திற்குள் புதிய ஊதியக்குழு அமைக்கப்படும் என நம்பப்படுகிறது.
இந்த குழு அமைக்கப்பட்ட பின், பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அப்போது அரசின் ஒப்புதல் கிடைக்க ஒரு முதல் ஒரு அரை ஆண்டுக்காலம் ஆகும். எனவே, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்கோ அல்லது 2027-ஆம் ஆண்டின் ஆரம்பத்துக்கோ புதிய ஊதியங்கள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
ஊதிய உயர்வு:
தற்போதுள்ள தகவலின்படி, 8வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 30% முதல் 34% வரை சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் எவ்வளவு?
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது சம்பள உயர்வின் அடிப்படை கணிப்பாகும். கடந்த 7வது ஊதியக்குழுவில் இது 2.57 ஆக இருந்தது. தற்போது இது 1.83 முதல் 2.46 வரையில் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
உதாரணமாக, ஒருவரின் அடிப்படை சம்பளம் ₹18,000 ஆக இருந்தால், 2.46 ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் புதிய சம்பளம் ₹44,280 ஆக அதிகரிக்கும். ஓய்வூதியம் ₹30,000 ஆக இருந்தால், இது ₹73,800 ஆக உயரக்கூடும்.
முக்கிய அறிவிப்பு எப்போது?
8வது ஊதியக்குழுவுக்கான தலைவரும் உறுப்பினர்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஆகவே, ஜனவரி 2026-ல் அமலுக்கு வரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

8வது ஊதியக்குழு: ஓய்வூதியம் ₹25,000-ஐ கடக்கும்? மத்திய அரசு பென்ஷன் உயர்வு குறித்து முக்கிய அப்டேட்!

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

8வது ஊதியக்குழு அப்டேட் 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நம்பிக்கை | அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொடக்கம் | ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விவரங்கள்!

8வது ஊதியக்குழு (8th Pay Commission): மத்திய அரசு ஊழியர்களின் கேள்விகள் என்ன? பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கும் முக்கிய விஷயங்கள்!

8வது ஊதியக் குழு 2026: லெவல் 1 முதல் லெவல் 18 வரை யாருக்கு அதிக சம்பள உயர்வு? முழு விவரம்!














