வணிகம்
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு – முழு விவரம்!
Published
1 வாரம் agoon
By
Poovizhi
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு (8th Pay Commission) தொடர்பான முக்கிய அப்டேட்கள் வெளிவந்துள்ளன. 7வது ஊதியக்குழுவில் இருந்த 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) 8வது ஊதியக்குழுவில் 2.86 ஆக உயர வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில், பல்வேறு லெவல்களில் சம்பள உயர்வு வரலாறு காணாத அளவில் அதிகரிக்க உள்ளது.
சம்பள உயர்வு சாத்தியம்:
லெவல் 1: ₹18,000 → ₹51,480
லெவல் 5: ₹29,200 → ₹83,512
லெவல் 10: ₹56,100 → ₹1,60,446
லெவல் 13A: ₹1,31,100 → ₹3,74,946
லெவல் 18: ₹2,50,000 → ₹7,15,000
இதனால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,480 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.25,740 ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அரியர் தொகை மற்றும் நன்மைகள்:
ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்பட்சத்தில், அன்றிலிருந்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அரியர் தொகையும் (Arrears) வழங்கப்படும். அத்துடன், அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பயணப்படி (TA) ஆகியவற்றிலும் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும்.
வரலாற்று ஒப்பீடு:
2016 இல் 7வது ஊதியக்குழு செயல்படுத்தப்பட்டபோது, குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. அதேபோல், ஓய்வூதியம் ரூ.3,500 லிருந்து ரூ.9,000 ஆக அதிகரித்தது. இந்த முறை 186% வரை உயர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.
தற்போது அரசாங்கம் மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கமிஷன் அமைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like
8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு உறுதி?
8வது ஊதியக் குழு மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் வரவிருக்கும் பெரும் மாற்றங்கள்! எவ்வளவு உயரும்?
8வது ஊதியக்குழு வருகிறதே: ஊழியர்கள் குஷி! 186% ஓய்வூதிய உயர்வு, காரணம் Fitment Factor!
8வது ஊதியக் குழு 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பெரிய அறிவிப்பு!