தமிழ்நாடு
தமிழக தேர்தல்: அதிகபட்ச, குறைந்தபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி எது?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது என்பதும், 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும், 20ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றதூ. இந்த நிலையில் நேற்று மாலை வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் முன்பு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடக்கும், ஆனால் தற்போது அதிகப்படியான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்திலேயே மிகவும் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக வால்பாறை உள்ளது. இந்த தொகுதியில் 6 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 28 வேட்பாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 35 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















