கிரிக்கெட்
ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள்: ஆனால் 6 சதங்கள் அடித்த அந்த வீரர் மட்டும் இல்லை!

ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் ஆறு சதங்கள் அடித்த அந்த முக்கிய வீரர் இடம்பெறவில்லை என்றும் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் வீரர்கள் ஏலத்தில் எடுக்க உள்ளார்கள் என்பதும் இந்த ஆண்டு ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர்களின் முழுமையான பட்டியலை பிசிசிஐ வெளியிட்ட நிலையில் இந்த பட்டியலில் கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவு வீரரான கிறிஸ் கெய்ல் இடம்பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆறு சதங்கள் உள்பட 142 போட்டிகளில் சுமார் 5000 ரன்கள் அடுத்துள்ள கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடர் போட்டியில் இடம் பெறவில்லை என்பது பெரும் அதிர்ச்சி கூடியதாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவர்களும் ஐபிஎல் போட்டியில் இடம்பெற வில்லை.
வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் என்றும் 2 நாள் நடைபெறும் இந்த ஏலத்தின் போது 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் பிசிசிஐ தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. 2 கோடி ரூபாய் உச்ச வரம்பு கொண்ட ரிசர்வ் விலைப்பட்டியலில் 48 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அதேபோல் 1.5 கோடி விலையில் 20 வீரர்களும் ஒரு கோடி விலையில் 4 வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கு கொள்ள இருக்கும் மொத்தமுள்ள 590 வீரர்களில் 228 பேர் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் என்றும் 355 பேர் புதிய வீரர்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.







