இந்தியா
வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை: 7 பேர் பலி

வடமாநிலங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. மழையின்போது வீசிய பலத்த காற்றால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தாமதமாக தரையிறங்கின. இதனால் விமானப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனைத் தொடர்ந்து, டெல்லி நஜாப்கர் பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் 28 வயதுடைய பெண்ணும், அவரது 3 குழந்தைகளும் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், காஷ்மீர் செனாப் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.










