விளையாட்டு
இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான முதல் வாள்ச் சண்டை வீராங்கனை பவானி..!

இந்தியா சார்பில் வருகிற 2024 ஒலிம்பிக் போட்டிகளில் வாள் சண்டை போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி.

இதுவரையில் ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றுள்ள வாள் சண்டை போட்டிகளில் இந்தியா சார்பில் யாருமே பங்கேற்றது இல்லை. முதல் முறையாக இந்த வரலாற்றை மாற்றி தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இந்தியாவை ஒலிம்பிக் போட்டிகளில் முன் நிறுத்த உள்ளார். சமீபத்தில் ஹங்கேரியில் நடந்த வாள் சண்டை உலகக் கோப்பை போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடினார் பவானி தேவி.
அந்தப் போட்டியில் கொரியாவிடம் தோல்வி அடைந்தாலும் உலகக் கோப்பை கால் இறுதி என்பதால் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் பவானி. இதன் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2020 ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு நடக்காமல் இந்த ஆண்டு நடக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
2020 ஒலிம்பிக் போட்டிகள் 2021-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.



