இந்தியா
காதலித்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை: கொலை செய்து வாட்டர்டேங்கில் போட்ட காதலனின் வெறிச்செயல்!

காதலித்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையை அவருடைய பெற்றோர் பார்த்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை கொலை செய்து வாட்டர் டேங்கில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ராஜ்னி மசாரே. இவர் அதே பகுதியில் வசித்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் திடீரென ராஜ்னி மசாரே பெற்றோர்கள் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர்.
நிச்சயதார்த்தத்திற்கு மூன்று நாள் இருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த காதலன், ராஜ்னி மசாரேயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ராஜ்னி மசாரேvஇன் வீட்டின் மொட்டை மாடியில் இந்த வாக்குவாதம் நடந்த நிலையில் இருவரும் காரசாரமாக பேசிய நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர், தனது காதலியை கொலை செய்து மொட்டை மாடியில் இருந்த வாட்டர் டேங்கில் பிணத்தை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜ்னி மசாரே பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். காதலித்த பெண்ணை வேறொருவருக்கு நிச்சயம் செய்ய முயற்சி செய்ததால் காதலனின் வெறிச்செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















