Connect with us

உலகம்

தொடர்ச்சியாக திங்கட்கிழமை விடுமுறை எடுத்த ஊழியர் நீக்கம்.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

Published

on

தொடர்ச்சியாக திங்கட்கிழமை விடுமுறை எடுத்த பெண் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த பெண் நீதிமன்றம் சென்று முறையிட்டதில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெண் சலூன் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு ஆண்டு சம்பளமாக சுமார் 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அந்த சலூனில் பல விஐபிகள் ரெகுலர் கஸ்டமர் என்பதாலும் சிகை அலங்காரம் உட்பட பல முக்கிய பணிகள் அந்த சலுவுனில் இருப்பதாலும் ஒவ்வொரு நாளும் விடுமுறை எடுக்காமல் வேலை செய்ய வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் பெண் ஒருவர் தொடர்ச்சியாக திங்கட்கிழமைகளில் விடுமுறை எடுத்து வந்ததை அடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக அந்த பெண்ணை வேலை நீக்கம் செய்தார். இதனை அடுத்து அந்த பெண் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணுக்கு ரூபாய் மூன்று லட்சம் இழப்பீடு வழங்கி அந்த பெண்ணை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது அந்த பெண் தனது சக ஊழியர்களை விட அதிகம் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் விடுமுறை எடுப்பதாகவும் குறிப்பாக சனி ஞாயிறு என்ற வார விடுமுறையை அடுத்து பெரும்பாலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அவர் விடுமுறையை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த திங்கட்கிழமை அன்று மிகவும் முக்கிய நாளென்றும் அந்த நாளில் பல முக்கிய விஐபிகள் வருவார்கள் என்பதால் அவர் விடுமுறை எடுக்கக் கூடாது என்று வெள்ளிக்கிழமையே கூறப்பட்டிருந்ததாகவும் ஆனால் திடீரென தனக்கு வயிறு வலி ஏற்பட்டதால் திங்கட்கிழமை அவர் விடுமுறை எடுத்ததால் கோபம் அடைந்த உரிமையாளர் அவளை வேலை நீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண்ணின் தரப்பினர் நீதிமன்றத்தில் கூறிய போது தனக்கு மாதவிடாய் நோய் ஏற்பதாகவும் வலி காரணமாக அன்றைய தினம் விடுமுறை எடுக்க நேர்ந்ததாகவும் கூறியதோடு அதற்குரிய மருத்துவ சான்றிதழையும் காண்பித்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னை கவனித்துக் கொள்வதற்காக அவருடைய மாமியாரும் அன்றைய தினம் விடுப்பு எடுத்து இருந்தார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உடல் நிலை குறைபாடு இருப்பதால் அவரது முதலாளி முறையான எச்சரிக்கை வழங்காமல் வேலையிலிருந்து நீக்கியது தவறு என்று கூறிய நீதிமன்றம் ரூபாய் 3 லட்சம் இழப்பீடாக தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?