உலகம்
இறந்த கணவரை தினமும் சாப்பிடும் மனைவி: அதிர்ச்சி தகவல்

இறந்த கணவரின் அஸ்தியை அவரது மனைவி தினமும் சாப்பிட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கேட்டி என்ற பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென சீயனுக்கு ஆஸ்மா நோய் ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த நிலையில் சீயனை எரித்து அவரது சாம்பலை கேட்டி பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகவும் தினமும் அவரது சாம்பலை சாப்பிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி கேட்டி வெளியே எங்கு சென்றாலும் கணவரின் அஸ்தி பெட்டியை எடுத்துக் கொண்டு செல்வதாகவும் இரவில் தூங்கும் போது கூட அஸ்தி பெட்டியை கட்டி அணைத்துக் கொண்டுதான் அவர் தூங்குவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன
தனது கணவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளதாகவும், அதன் காரணமாக அவர் தன்னுடனே வாழ்ந்து வருகிறார் என்று தான் நினைத்து வருவதாகவும் அதனால் தான் அவரது அஸ்தியை தினமும் சாப்பிட்டு வருவதாகவும் கேட்டி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க அவரது உறவினர்கள் முயற்சித்த போதிலும் எந்தவித பலனும் அளிக்கவில்லை என்றும் தொடர்ந்து அவர் தனது கணவரின் அஸ்தியை சாப்பிட்டு வருவதாகவும் அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










