Connect with us

உலகம்

தினமும் 22 மணி நேரம் தூக்கம்.. அரிய வகை நோயால் அவஸ்தைப்படும் பெண்..!

Published

on

பலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் 38 வயது பெண் ஒருவருக்கு எப்பொழுதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது என்றும் அவர் ஒரு நாளுக்கு 22 மணி நேரம் தூங்குவதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த ஜோனா காக்ஸ் என்ற 38 வயது பெண் கடந்த சில ஆண்டுகளாக அதிக தூக்க பழக்கம் காரணமாக பகல் இரவு என முழுமையாக தூங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் விழித்திருக்கும் நேரம் இரண்டு மணி நேரத்துக்கு குறைவானது என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் அவருக்கு சோர்வு நோய் இருப்பதாக கூறப்பட்டது என்றும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது என்றும் அவரது நோய்க்கு இன்னும் மருத்துவம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தான் முதலில் தான் மிகவும் சோர்வாக இருப்பதை ஜோனா உணர தொடங்கினார். இதனை அடுத்து அவருக்கு எப்போதுமே தூக்கம் வந்து கொண்டே இருந்தது, கார், கிளப், வேலை செய்யும் இடம் என எங்கும் அவர் தூங்கிக் கொண்டே இருந்தார். இதன் காரணமாக அவர் தான் வேலையை விட்டுவிட்டு வீட்டில் தூக்கம் வந்தபோதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 20 மணி நேரம் முதல் 22 மணி நேரம் அவர் தூங்குவதை அடுத்து அவரது குடும்பத்தினர் அச்சமடைந்து மருத்துவரிடம் சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர்

சிகிச்சையில் அவருக்கு சாதாரணமான தூக்க கோளாறு என்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கான என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. இதனை அடுத்து தூக்க கிளினிக் ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டார். இருந்தும் அவருக்கு என்ன வகையான நோய் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.


கடந்த ஆறு ஆண்டுகளாக அவரது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் ஒரு சில மணி நேரங்கள் அவர் விழித்திருந்தாலே அது மிகப்பெரிய விஷயமாகவும் தெரிகிறது என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்ற்னர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானதை கூட செய்ய முடியவில்லை என்றும், தனக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்போது தூங்கினேன்? எப்போது எழுந்தேன்? என்பதே எனக்கு தெரியவில்லை என்றும் இன்றைய தினம் என்ன? இன்று என்ன கிழமை என்று கூட எனக்கு தெரியாது என்றும் அந்த அளவுக்கு நான் என்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்

அவருக்கு வந்த இந்த அரிய நோய் அவரது குடும்பத்தினர்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?