தமிழ்நாடு
கத்துக்குட்டி அண்ணாமலை… அவருக்கு வியாதி… மீண்டும் சீண்டும் அதிமுக!

அதிமுக-பாஜக இடையே நிலவி வந்த வார்த்தை போர் சற்று ஓய்ந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கஃபம்பூர் ராஜூ அண்ணாமலை குறித்து கத்துக்குட்டி என விமர்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

#image_title
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்வு கோவில்பட்டி அருகே அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, என் மனைவி ஜெயலலிதாவைவிட 1000 மடங்கு பெரியவர் என அண்ணாமலை சொல்கிறார். அரசியலில் கத்துக்குட்டி அண்ணாமலை. முதல்வர்கள் கூட்டத்திற்கு ஜெயலலிதா செல்லும் போது நாட்டில் உள்ள அத்துனை முதல்வர்களும் எதிர்பார்த்து நின்று வரவேற்பார்கள். ஐபிஎஸ் ஆகி டிரான்ஸ்ஃபரில் அரசியலுக்கு ரெபுடேஷனில் வந்தவர் அண்ணாமலை. அரசியல் மாற்றம் வந்தால் மீண்டும் ஐபிஎஸ் வேலைக்கு சென்று விடுவார்.
அரசியல்வாதி பேச்சை அளந்து பேச வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா? அவருக்கு அது ஒரு சீக்கு போல இருக்கிறது. அண்ணாமலைக்கு அது வியாதி. மைக்கை பார்த்துவிட்டால் போதும் சடசட என பேசுகிறார். இப்பொழுது அண்ணாமலை பேச ஆரம்பித்தாலே சேனலை மாற்றுகிறார்கள். இது இப்படியே சென்றால் பாஜக தரம் போய்விடும். அதிமுகவை உரசிய பிறகு யாரும் ஜெயித்ததாக வரலாறு இல்லை என்றார். கடம்பூர் ராஜூவின் இந்த பேச்சு அதிமுக-பாஜக உரசலை மீண்டும் அதிகப்படுத்தியுள்ளது.