உலகம்
பீதியை ஏற்படுத்தும் ‘மு வைரஸ்’.. யாருக்கும் கட்டுப்படாதா? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் உருவாகி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று.
முதல் அலையில் கொரோனா வைரஸ் தொற்று உருமாற்றம் பெரிய அளவில் இல்லை. ஆனால் இரண்டாம் அலையில் டெல்டா, ஆல்பா என பல்வேறு வகையில் கொரோனா வைரஸ் தொற்று உருமாறியுள்ளது.
இந்நிலையில் புதிதாக அமெரிக்காவில் மு வைரஸ் என்ற பெயரில் கொரோனா தொற்று உருமாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உருமாறியுள்ள இந்த மு வைரஸ் இதுவரையில் இல்லாத அளவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங் காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த உருமாறிய கொரோனா தொற்றின் மாதிரிகள் கிடைத்துள்ளன. கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலும், அதிலிருந்து இந்த மு வைரஸ் தப்பிவிடும் என்றும் கூறப்படுகிறது.
இப்போது இந்த வைரஸ் தொற்றின் பரவல் விகிதம் 0.1 என்ற விகிதத்தில் உள்ளது. இப்போதைக்கு அதனால் பாதிப்பு இல்லை என்றாலும், உலக நாடுகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த மு வைரஸ் கொலம்பியாவில் 39 சதவீதமும், ஈக்விட்டாரில் 13 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. இது வேகமான பரவக் கூடிய வைரஸ் தொற்று என்பதால் உலகும் முழுவதும் பெரிய அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 39 நாடுகளில் இந்த மு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரையில் இந்த மு வைரஸ் பாதிப்பு இதுவரையில் கண்டறியப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பு இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


















