சினிமா செய்திகள்
அசுரன் படத்தில் தனுஷுக்கு வில்லன் யார் தெரியுமா?

வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவல் தான் அசுரனாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மலையாள நடிகையான மஞ்சுவாரியரின் முதல் தமிழ் படமும் இதுதான். மேலும், தனுஷின் மகனாக நடிகர் கருணாசின் மகன் கென் கருணாஸ் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்திகள் முன்னதாக வெளியாகின.
தற்போது, புதிய அப்டேட்டாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் வலுவான முக்கிய வில்லனாக நடிக்கிறார்.
முன்னதாக தனுஷ் நடித்த வடசென்னை படத்தில், இயக்குநர்கள் அமீர், சமுத்திரகனி நடித்திருந்தனர். கெளதம் மேனன் இயக்கத்தில் இன்னமும் வெளிவராத எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இயக்குநர் சசிகுமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.









