Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 8 முதல் 14 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

என்றும் உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் வரலாம். வருமானம் நல்லபடியாக இருப்பதால் செலவுகளை சமாளிக்கலாம். சிலருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரலாம்.  சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம்.

தொழில்துறையினர் அபிவிருத்திக்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நிலுவையிலுருந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் இடங்களில் சக பணியாளர்களால் தொந்தரவு இருந்து கொண்டு தான் இருக்கும். வீண் விவாதங்கள் வேண்டாம்.

குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கியிருக்கும். மூத்த சகோதரர்களுடன் ஏதாவது பிரச்சினை இருந்தால் இப்போது சரியாகி விடும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்க வாய்ப்புள்ளது.

பெண்மணிகளுக்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டோடும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.

மாணவர்கள் மேற்கல்வி படித்து முடித்து வேலைக்கு  தேடும் மாணவ மணிகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் எதிர்பார்த்த சம்பளத்துடன் கிடைக்கும்.

பரிகாரம்:அருகிலிருக்கும் அம்பாளை தரிசியுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்,  வெள்ளி.

*********************************************************************************************************************************

ரிஷபம்

தனது வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம்  முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம்.  திருமண பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  முன்பு எடுத்த முடிவுகள் தவறில்லை என்று அனைவராலும் புகழப் படுவீர்கள். சிலருக்கு வெளிநாடு போகும் கனவு நிறைவேறும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும்.

தொழிலில் உற்சாகமாக அனைத்து விசயங்களும் நடந்தேறும். சிலர் உங்களுக்கு பகைமை காட்டினாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.

உத்தியோகத்தை பொறுத்தவரை மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து நடப்பது சிறந்தது. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

குடும்பத்தில் பிள்ளைகள் விசயத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அதனால் கணவன் – மனைவிக்கிடையே பிரச்சினைகள் எழக்கூடும். பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வில்லையே என்ற ஆதங்கள் உங்கள் மனதில் ஏற்படும்.

பெண்கள் அலுவலகத்திற்கு சென்று வரும் போது கவனமாக இருக்கவும். குடும்ப சூழ்நிலையிலும் கவனமாக இருக்கவும். அசதி இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் மனம் லயிக்காது. எளிமையான பாடங்களைக் கூட படிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும்

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி,  செவ்வாய்

*********************************************************************************************************************************

மிதுனம்

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் நிம்மதி பெருமூச்சுவிடும்படியாக இருக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் வீடு, நிலம் போன்றவை விற்காமல் பெரும் கஷ்டப் பட்டவர்கள் எல்லோருக்கும் பாடு தீர்ந்தது. பங்காளிப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

தொழிலில், வியாபாரிகள் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமையை காட்டி இவருக்கு நிகர் எவருமிலர் என்ற பேர் எடுப்பீர்கள்.

உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு தள்ளிப் போவது போல் இருந்தாலும் இறுதியில் கிடைத்து விடும்.

குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வரக் கூடும். மூத்த சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். கணவண் – மனைவியரிடேயே பரஸ்பர அன்யோன்யம் நிலவும். பிள்ளைகள் வழியில் மிகப் பெரிய மகிழ்ச்சியை காண்பீர்கள். உடல் உபாதைகளால் அவஸ்தைகள் வரலாம்.

மாணவ மணிகளுக்கு எதிர்பார்த்த கல்வி உதவித் தொகை கிட்டும். பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: திருப்பதி ஏழுமலையானை வணங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

*********************************************************************************************************************************

கடகம்

வயதில் மூத்தவர்களை கடைசி வரை பார்த்துக்கொள்ளும் கடக ராசி அன்பர்களே இந்த வாரம் பொருளாதார நிலை தாராளமாகவே இருந்து வரும். சிலருக்கு வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டு. உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.  கேட்ட இடங்களில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். மனதில் எப்போதும் சந்தோஷம் குடி கொண்டிருக்கும்.

தொழிலில் புதிய முயற்சிகளில் இருந்து வந்த தொய்வு நிலை படிப்படியாகச் சரியாகிவிடும். பணியாளர்களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அது உங்களுக்கு நல்லதல்ல.

உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சிலர் வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தால் இப்போது குடும்பத்துடன் இணைவீர்கள்.

குடும்பத்தை பொறுத்தவரை நல்ல முன்னேற்றமான வாரம். அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வீர்கள். குடும்பத்தில் அனைவருக்கும் தேவையானவற்றை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.தொழிலதிபர்கள் உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தியாக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பாடுபடுவீர்கள். சிலரால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகலாம்.

மாணவமணிகள் அரசு சம்மந்தப்பட்ட பணிகளுக்காக நீங்கள் தேர்வுகள் எதுவும் எழுதியிருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். மனதிற்குரிய சம்பவங்கள் நடக்கக் கூடும்.

பரிகாரம்: அம்பாளை ராகு காலத்தில் வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

*********************************************************************************************************************************

சிம்மம்

தனது முடிவில் வைராக்கியமாக இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லதை உங்களுக்கு அமைத்து தரும். நிதி நிலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. நெருங்கிய நண்பர் ஒருவருடன் பகை ஏற்படக்கூடும். திருமண வயதிலுள்ள மனதிற்கு ஏற்ற வரன் அமையும்.

தொழிலைப்  வரையில் சக பாகஸ்தர்களினால் வீண் பிரச்சினைகல் ஏற்படக்கூடும். இருப்பினும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருப்பதால் வெற்றிகரமாகவே அமையும்.

உத்தியோகத்தில் வேலைபார்த்து வரும் இடத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் பலம் குறைந்து தங்கள் கை ஓங்கி நிற்கும். மற்றவர்கலின் ஆதரவும் கிட்டும்.

குடும்பத்தில் அனைவரிடமும்  அன்பாக பழகுவீர்கள். தாய் தந்தையரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.  குடும்பத்தில் இருக்கும் மூத்தோர் கூட உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிதல் உண்டு

பெண்மணிகளுக்கு மன உறுதி அதிகரிக்கும். கற்பனையான பயத்தை மனதில் கொண்டு செல்ல வேண்டாம். தைரியமாக இருங்கள்

மாணவர்கள் முழு மனதுடன் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது. எதிர்பார்த்த கல்விக் கடன் கிடைக்கும்.  ஆசிரியரிடம் இருந்து நற்பெயர் எடுப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

*********************************************************************************************************************************

கன்னி

பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம் முற்பகுதியில் இருந்த சூழ்நிலை பிற்பகுதியில் இருக்காது. ஆரோக்கியத்திலும் அவ்வப்போது குறைகள் ஏற்படலாம். தக்க நேரத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. கடவுள் பக்தி அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் செலவுகளை நீங்களே சமாளித்து விடுவீர்கள். சொத்து சம்மந்தமான பிரச்சினை கவலையளிக்கும்.

தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிருப்தியான வாரமே. பொறுமையாக இருப்பது மிக அவசியம்.

உத்தியோகஸ்த்தர்களுக்கு   அலுவலகத்தில் கடின உழைப்பு இருக்கக் கூடும். சக ஊழியர்களிடம் எல்லை மீறி பழகாமலிருப்பது நல்லது.

குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கல்வி விஷயமொன்று கவலையளிக்கும். சில விசயங்களை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்மணிகள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவும். வேலையில் நிம்மதி இருக்கும்.

மாணவர்கள் எழுதியிருக்கும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேற்படிப்பிற்கான உதவித் தொகையும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

பரிகாரம்: சூர்யபகவானுக்கு சிவப்புநிற வஸ்திரம் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு.

*********************************************************************************************************************************

துலாம்

மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கும் துலா ராசி அன்பர்களே இந்த வாரம் முன்ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ள வேண்டிய வாரம். உடல் நிலை தொடர்ந்து பாதிப்பைத் தரலாம். மருத்துவ செலவு தொடர்ந்து தொல்லையைத் தரலாம். சிலர் நெருங்கிய நண்பர்களால் நீதி மன்றம் வரை செல்ல நேரலாம். முக்கிய பணிகள் இருப்பின் அதை சற்று தள்ளிப் போடுதல் உத்தமம். கவனம் தேவை.

தொழிலில் நன்மை அளிக்கக் கூடிய வாரமாகவே இருக்கும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்கள் இப்போதைக்கு வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் எந்த பிரச்சினைகளும் வராது.

உத்யோகத்தில் மேலதிகாரிகளின்  பாராட்டு கிடைக்கும். வெகுமதியும் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்..

குடும்பத்தில் திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கை கூடும். கணவன் –  மனைவியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் எழக் கூடும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

பெண்கள் பயணங்களின் போது கவனம் தேவை.  குடும்பத்தில் மனநிம்மதி குறைந்தே காணப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு தாய் தந்தையர் சொல்வதில் நாட்டம் இருக்காது.  தாங்கள் சிரமப்படும் போது நண்பர்களின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கும். ரகசியங்களை காப்பாற்றுங்கள்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்கைஅம்மனுக்கு விளக்கேற்றி வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன்கிழமை, சனிக்கிழமை.

*********************************************************************************************************************************

விருச்சிகம்

தனது பதிவிகளை பாதுகாக்க போராடும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம்  தாங்களே எதிர்பாராத வகையில் செலவுகள் வரலாம்.  ஆனால் பொருளாதார நிலையில் எந்த வித மாற்றமும் இருக்காது. திருமண முயற்சிகளில் ஈடுபட்டால் கைகூடும். வரும் வரன்களை ஏற்றுக் கொண்டால் எதிர்காலம் திட்டமிட்டபடி நடந்தேறும்.

தொழிலதிபர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமாக இது இருக்கும். எதிர்பார்த்த வருமானத்தில் சற்று குறைவாக இருக்குமே தவிர பயம் வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்லாதவர்களுக்கு வேலை நல்லபடியாக கிடைத்து விடும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். அனுகூலமான வாரமாகவே அமையும்.

குடும்பத்தில் யாரேனும் பிரிந்து சென்றிருந்தால் அவர்கள் இப்பொழுது குடும்பத்தை நாடி வருவார்கள். திருடு போகவும் வாய்ப்புள்ளது கவனமாக இருந்து கொள்ளுங்கள். யாரையும் மனது நோகும் படி பேச வேண்டாம். தாயாரின் உடல் நலத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வது அவசியம்.

பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் உடலில் அசதி அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

மாணவ மணிகள் தீய நண்பர்களின் சகவாசத்தை அறவே தவிர்த்தல் நலம்.  மற்றபடி படிப்பில் பாதிப்பு எதுவும் வராது.

பரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்யுங்கள். காகத்திற்கு அன்னமிடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிக்கிழமை

*********************************************************************************************************************************

தனுசு

எதையும் கவனத்துடன் செய்ய நினைக்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் செல்வாக்கு மிகுந்த வாரம்.  மனதிற்கு நிம்மதிக்கு குறைவிருக்காது. திருமண வயதிலுள்ளவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வரன்கள் கிடைத்து திருமண ஏற்பாடுகள் வெகுவிரைவில் நடந்தேறும். சுபச் செலவுகளினால் பணம் செலவாகும்.

தொழிலில் நீங்கல் கொடிகட்டிப் பறக்கப் போகிறீர்கள். தொழிலாளர்களும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பார்கள். உற்சாகமான வாரம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். அதன் காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் அசையா சொத்துகளினால் நல்ல லாபம் கிடைக்கும். பணமில்லையே எப்படி என்றாலும் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு சொத்து கிடைத்தே தீரும். நீங்கள் விரும்பும் படியும் அது இருக்கும். மற்றவர்கள் உங்களை பெரிதாக நினைத்து உங்கல் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு வேலைக்குச் செல்லும் வேலையில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும்.  பெண்கள் சிலர் சுற்றுலா சென்று வருவீர்கள்.

மாணவமணிகள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வேண்டுமென்று முயற்சி செய்து வருபவர்களுக்கு அதில் சிறுசிறு தடங்கல்கள் வரக் கூடும்.

பரிகாரம்: சுப்ரமணியருக்கு நெய்தீபம் ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

*********************************************************************************************************************************

மகரம்

வேலைகளை உறிதுயுடன் செய்ய நினைக்கும் மகர ராசி அன்பர்களே இந்த வாரம் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அவ்வப்போது வயிறு சம்மந்தமான உபாதைகள் ஏற்பட்டு தொல்லை கொடுக்கும். நெருப்பு சம்மந்தமான பொருள்களை கையாளும் போது கவனமாக இருக்கவும்.

தொழிலில் விற்பனை அதிகரிக்கும். ஏற்றுமதி – இறக்குமதி தொழில் செய்பவருக்கு அனுகூலமான வாரமாகவே இருக்கும்.

உத்தியோகத்தில் சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு  உருவாகும். உடன்பணிபுரிபவர்களுக்கு ஒத்துழைப்பு நீங்கள் கொடுப்பீர்கள்.  சிலரது மறைமுக சூழ்ச்சி உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். வெகு காலமாக வீட்டிற்கு வராத உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வருவார்கள். அது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான உப கரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு பணியில் நிம்மதி இருக்காது.

மாணவர்கள் ஞாபக சக்தியும், கிரகிப்புத் திறனும் அதிகமாக இருக்கும். அதனால் படிப்பில் மனம் சிறந்து விளங்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு

*********************************************************************************************************************************

கும்பம்

யாரிடமும் பாசமாக பழகும் கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைத்து சில கடன் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்.

தொழில் அபிவிருத்திக்காக பணத்தை இப்போது செலவு செய்ய வேண்டாம். தகுந்த நேரம் வாய்க்கும் போது பார்த்துக் கொள்ளலாம்.  நிலுவையிலிருக்கும் பணம் வந்து சேரும்.

உத்தியோகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் வருமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் வருங்காலத்திற்கு ஏற்றது.

குடும்பத்தில் மற்றவர்கள் உங்கள் பேச்சை கேட்கவில்லையே என்ற கவலை மேலோங்கும். புதிய வண்டி, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை சற்று தள்ளிப் போடுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருந்து கொண்டிருக்கும்.

பெண்கள் எதிலும் சற்று கவனமாக நடந்து கொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்டு வந்த தொல்லை அகலும்.

எதிலும் பயம் வேண்டாம். தொழில்ரீதியான படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் மிகவும் பாடுபட்டு படிக்க நேரிடும்.

பரிகாரம்: வீட்டில் தினமும் சஷ்டி கவசத்தை ஒலிக்கச் செய்து கேட்டு வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

*********************************************************************************************************************************

மீனம்

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மீன ராசி அன்பர்களே இந்த வாரம்உடனிருப்பவர்கள் உங்களை இழிவுபடுத்துவார்கள் அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பழகும் போது சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. யாருடனும் எதையும் கலந்து ஆலோசிக்க வேண்டாம்.

குடும்பத்தில் கணவன் –  மனைவியரிடையே சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது மனநிம்மதியைத் தரும். குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள்.

பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்களுக்கு உற்சாகமான வாரமாகவே அமையும். கவலை தேவையில்லை.

மாணவர்கள் படிப்பில் இருந்து வரும் முன்னேற்றம் அப்படியே இருக்கும். அதனால் எழுதிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: சூரிய பகவானுக்கு விளக்கேற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

*********************************************************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. grilled pork with preserved lemons​. Link.