Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் நவம்பர் 17 முதல் 23 வரை )

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

வாரபலன்

மேஷம்:

யார் மனதையும் புண்படுத்தாத மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த வாரம் வீண் மனக் கவலை உண்டாகலாம். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை

தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.

பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரிய படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

*****************************************************************************

ரிஷபம்:

நண்பர்களுடன் பழகுவதை விரும்பும் ரிஷ்பம் ராசி அன்பர்களே! இந்த வாரம் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம்.பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: சஷ்டிக் கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

*************************************************************
மிதுனம்:

எண்ணத்தில் தெளிவுள்ள மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பரிகாரம்: சிவன் வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

**************************************************************
கடகம்:

திறமையில் நம்பிக்கையுடைய கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றத்துடன் கூடிய பரிசுகளும் கிடைக்கும். சக மாணவர்களுடன் கூட்டு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

***************************************************************

சிம்மம்:

விரைவாக முடிவு எடுக்க கூடிய சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு தொடர்ந்து முட்டுக் கட்டையாக இருந்தவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். அதனால் உங்கள் வியாபாரம் நன்கு நடைபெறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும்.

பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

****************************************************************
கன்னி:

குடும்பப் பொறுப்புகளை சுமக்ககூடிய கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும்.

தொழில் நல்லபடியாக நடந்து வரும். உங்கள் தொழிலில் நீங்கள் தான் கொடிகட்டிப் பறப்பீர்கள். தொழிலாளர்களுக்காக சில வசதிகளை செய்து கொடுக்க நேரிடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: நாகலிங்க மலரை சிவபெருமானுக்கு சூடி மகிழுங்கள். கேட்டதை கொடுப்பார்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

********************************************************************
துலாம்:

பின்விளைவுகளை யோசித்து செயலாற்றும் துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் பணப் பற்றாக்குறை நீங்கும். எனினும் மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும்

குடும்பத்திற்காக சில புதிய கடன்களை வாங்க நேரிடும். உங்களால் முடிந்த வற்றை செய்து நற்பெர்யர் வாங்குவீர்கள். ஆனாலும் சிலர் பேசும் பேச்சுகள் உங்கள் மனதை புண்படுத்தும். எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் மேலோங்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரம் புதிய நிபந்தனைகளில் பேரில் நடைபெறும். சீரான விவகாரங்கள் தலை தூக்கும். உங்களுக்கு தலைவலியாக இருந்தவர்கள் விட்டு விழகி விடுவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.
பெண்களுக்கு மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். மனதில் உண்டான கேள்விகளை மனதிலேயே புதைக்க நேரிடும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் முழு கவனத்தையும் தம்பால் இழுத்துக் கொள்ள விருப்பம் ஏற்படும். விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: விரதம் இருந்து நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

**********************************************************************
விருச்சிகம்:

முன்னெச்சரிக்கையுடன் செயல்படக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உண்டு. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தேவையான நிதி வசதிகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம் இட மாறுதல்கல்களைச் சந்திக்க நேரிடும். புதிய தொழில் துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்று தீர்ந்து விடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு முக்கியமான வேலை களில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.

மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: வேங்கடேசப் பெருமாளுக்கு தயிர் சாதம் நெய்வேத்யம் செய்து வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

***********************************************************************
தனுசு:

தன் மனசு சொல்வதைக் கேட்டு நடக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும் பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக சோர்வு ஏற்படும். ஆனாலும் பொருட்படுத்தாது வேலையை முடித்து விடுவீர்கல்.

பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ருத்ர மூர்த்தியை நெய் தீபமேற்றி வழிபடுங்கள். துன்பங்கள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

**************************************************************************
மகரம்:

தோழ்விகளை தைரியமாக எதிர்கொள்ளும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

தொழில் சார்ந்த விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். யாராவது ஒருவர் உங்களுக்கு உற்றதுணையாக இருப்பார். அரசு விவகாரத் தொழிலில் உள்ளவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தீவிரமாக உழைக்க வேண்டி வரலாம். நற்பெயரை சம்பாதிப்பீர்கள்.
பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: முல்லை மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

**************************************************************************
கும்பம்:

வெற்றிகனியை சுவைப்பதில் வல்லமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்

தொழில், வியாபாரம் நல்ல நிலையில் இருக்கும். கிடைக்க வேண்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கு வேண்டியதை செய்வீர்கள். வியாபார மேம்பாட்டிற்கு புதிய வழி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத மன உளைச்சலை சந்திக்க நேரிடும். கவனம் தேவை.
பெண்களுக்கு அலுவலகத்தில் தேவையில்லாத தொந்தரவுகள் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களால் சில சச்சரவுகள் ஏற்படலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கீழ் பணிந்து நாட்டமுடன் அனைத்து காரியங்களையும் செய்து நற்பெயர் வாங்குவீர்கள்.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

****************************************************************************
மீனம்:

நேரத்தை வீணாக்காமல் நடந்துக்கொள்ளும் மீன ராசி அன்பர்களே இந்த வாரம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்

உத்தியோகம் தேடுபவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். ஆனாலும் வேலை முடிந்தபாடிருக்காது.

பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.

மாணாக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வணங்கி கஷ்டங்களை தவிருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

****************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Link. Amet consectetur adipiscing. Link.