Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரப்லன் (ஜூன் 23 முதல் 29 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து சரி செய்யும் மேஷ ராசியினரே இந்த வாரம் . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கு காணப்படும். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிபோடுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவும் கிடைக்க பெறுவார்கள்.

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

பரிகாரம்: திருப்பரங்குன்றம் முருகனை நினைத்து வணங்க முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

*************************************************************************************

ரிஷபம்:

கலக்கமான மனநிலையிலும் தெளிவான முடிவு எடுக்கும் ரிஷப ராசியினரே இந்த வாரம் சிற்றின்ப செலவு அதிகரிக்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள்.

பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.

மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: அஷ்ட லட்சுமி கோவிலுக்கு சென்று வர எல்லா செல்வங்களும் கிடைக்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

*************************************************************************************

மிதுனம்:

எதை பொறுமையுடன் கையாளும் மிதுனராசியினரே இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்த படி சாதகமான பலன் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம்.

பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்.

பரிகாரம்: ஸ்ரீமன் நாராயணரை தினமும் வணங்கி வர ஏராளமான நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

*******************************************************************************************

கடகம்:

நிறைவான வாழ்க்கை வாழ ஆசைப்படும் கடக ராசியினரே இந்த வாரம் எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள்.

குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்க ளில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.

பரிகாரம்: ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு உதவ வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

*************************************************************************************

சிம்மம்:

கர்ஜிக்கும் குரல் அமைப்பு கொண்ட சிம்மராசியினரே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். இந்த வாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல் படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்க ளால் காரிய வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமாகலாம். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

பரிகாரம்: பிரித்தியங்கார தேவிக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

*************************************************************************************கன்னி:

உங்கள் வழி தனி வழி என்று செயல்படும் கன்னி ராசியினரே இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்கு டன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றி வர குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

*************************************************************************************துலாம்:

சீரான சிந்தனையுடன் அனைவருடனும் பழகும் துலா ராசியினரே இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தை தரும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: மகாலட்சுமிக்கு 108 முறை குங்கும அர்ச்சனை செய்யுங்கள். வெற்றிகளைக் காணுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

*************************************************************************************

விருச்சிகம்:

சுறுசுறுப்புடன் அனைத்து விசயங்களையும் நடத்திவிடும் விருச்சிகராசியினரே! இந்த வாரம் பலவகையான யோகத்தை தரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்தி லும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக் கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.

குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எல்லா நன்மைகளும் நடைபெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

*************************************************************************************

தனுசு:

உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதன் மூலம் மகிழ்ச்சியடையும் குணமுடைய தனுசு ராசியினரே இந்தவாரம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத் தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: குரு காயத்ரீ சொல்லி பகவானை வழிபாடு செய்ய துன்பங்கள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

*************************************************************************************

மகரம்:

உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கக் கூடிய மகர ராசியினரே இந்த வாரம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார் கள். பணவரத்தும் இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

பெண்களுக்கு சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்து டன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் போட்டு வணங்க பிரச்சனைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

*************************************************************************************

கும்பம்:

எடுக்கும் காரியங்களை பூரண திருப்தியுடன் செய்து முடிக்கும் திறன் உடைய கும்பராசியினரே இந்த வாரம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு வார இறுதியில் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: எண்ணெய்க் குளியல் காரியத் தடைகளை விலக்கும் சிறந்த பரிகாரமாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

*************************************************************************************

மீனம்:

சிக்கலான சமயத்திலும் திடமான மனதுடன் செயலாற்றும் மீனராசியினரே, இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத் திற்கு தேவையான பண உதவி கிடைக் கும். தொழில் விருத்தியடையும்.

உத்தியோகம் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: இல்லத்தில் கணபதி ஹோமம் செய்வது எடுத்த காரியங்களில் இருந்த தடையை விலக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

*************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 மணி நேரம் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா3 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா3 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.