Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

மற்றவர்களுக்கு முன் உதாரணமாக செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!. இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.  

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம்  காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீநரஸிம்மரை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

ரிஷபம்:

தன்நம்பிக்கையுடனும்,  உறுதியுடணும் வாழ ஆசைப்படும் ரிஷப ராசி அன்பர்களே!. இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.  புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். 

மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்:  முருகனை வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

மிதுனம்

கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.     

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

கடகம்:

மற்றவர்கள் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். 

தொழில் வியாபாரத்தில் பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. 

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனுக்கு கோதுமையை கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

சிம்மம்:

குறைகளை பெரிதுபடுத்தாத சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். 

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். 

பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

கன்னி:

எதிர்காலத்திற்கு தேவையானவற்றை சேர்த்து வைப்பதில் திறமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். 

பெண்களுக்கு  உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

துலாம்:

இருப்பதை வைத்து சந்தோஷபடக்கூடிய துலா ராசி அன்ப்ர்களே! இந்த வாரம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு  அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

விருச்சிகம்:

குருபக்தியுடைய விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

 குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும்.  

பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

தனுசு:

தெளிவான முடிவை எடுப்பதில் திறமை வாய்ந்த தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

மகரம்:

சத்தியம் தவறாத மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.   விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். 

மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும்.

பரிகாரம்:  சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

கும்பம்:

எளிதில் கோபப் படக்கூடிய கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்:  தினமும் முருகனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

மீனம் :

சிக்கன நடவடிக்கைகளில் காரியத்தை செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்6 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா6 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்6 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Producent suplementów diety.   starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. 2025 kars dolmuş saatleri, güzergahları ve Ücret bilgileri.