பர்சனல் ஃபினான்ஸ்
மகிழ்ச்சி.. இனி ஏடிஎம் மையங்களில் ‘கூகுள் பே, பேடிஎம்’ பயன்படுத்தியும் பணம் எடுக்கலாம்!

நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த யுபிஐ செயலிகள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம் என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே செயலிகள் மூலமாகப் பணம் எடுக்க முடியும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் நிலையங்களில் பணம் எடுக்கும் முறையை, NCR கார்ப்ரேஷன் அறிமுகம் செய்துள்ளது. இதை “Interoperable Cardless Cash Withdrawal –ICCW”. என்று கூறுகின்றனர்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது எப்படி?

1) யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே என ஏதேனும் ஒரு யுபிஐ செயலி உங்கள் மொபைல் போனில் இருக்க வேண்டும்.
2) அந்த செயலிகள் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3) யுபிஐ செயலிகளில் உள்ள QR குறியீடு ஸ்கான் செய்யும் முறை மூலமாக, ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்த பிறகு எவ்வளவு பனம் தேவை என்று உள்ளிட வேண்டும்.
4) பணத்தை உள்ளிட்ட பிறகு, 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால், வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணம் விநியோகிக்கப்படும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும்.




















