சினிமா செய்திகள்
விஷால், ஆர்யாவின் ‘எனிமி’ அட்டகாசமான டீசர்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசரை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் காட்சிகள் பார்க்கும்போதே அட்டகாசமாக உள்ளது என்பதும் குறிப்பாக ஆர்யா மற்றும் விஷாலின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
’உலகத்திலேயே ஆபத்தான எதிரி யார் தெரியுமா? உன்ன பத்தி எல்லாமே தெரிஞ்ச உன்னோட நண்பன் தான்’ என்ற வசனம் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது என்பதும், இந்த வசனமே படத்தின் கதையை கிட்டத்தட்ட கூறிவிடுவதால் இந்த படத்தை பார்க்கத் தூண்டும் வகையில் டீசர் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஷால் ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பதும், பின்னணியை சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில், ரேமண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.