சினிமா செய்திகள்
விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’: அரசியல் நெடியுடன் கூடிய டிரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் செப்டம்பர் 13-ஆம் தேதி ’அனபெல்லா சேதுபதி’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 10ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த ’துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
அரசியல் நெடியுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் அரசியல்வாதிகளாக நடித்துள்ளனர். ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொள்ளும் கேரக்டரில் இவர்கள் நடித்துள்ளதால் இந்த படம் சுவராஸ்யமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர் என்றும் முக்கிய வேடம் ஒன்றில் சத்யராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நிமிடத்திற்கு மேலும் ஓடும் இந்த படத்தின் டிரைலர் அரசியல் நெடியுடன் கூடிய வசனங்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த படம் ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் அரசியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்சேதுபதி, ராஷி கண்ணா, பார்த்திபன், சத்யராஜ், மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.