சினிமா செய்திகள்
இன்ஸ்டாவில் சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா!
தென்னிந்திய நடிகர்களில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்திய நடிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நடிகர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அதில் தங்களுடைய புகைப்படங்களையும் தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் பதிவு செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
பொதுவாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நடிகர் நடிகைகளுக்கு மிக விரைவில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை பெற்று விடுவார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா மிகக் குறைந்த நாட்களில் 13 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று தென்னிந்திய நடிகர்களில் மிக விரைவில் 13 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 13 மில்லியன் ஃபாலோயர்களை விஜய்தேவரகொண்டா பெற்றிருந்தாலும் அவர் ஒருவரை கூட ஃபாலோ செய்யவில்லை என்பது ஆச்சரியமான தகவலாகும்.
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ம் ஆண்டு ’நுவிலா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான அவருக்கு ’அர்ஜுன் ரெட்டி’ மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்று கூறவும் கூறலாம்.
அதனை அடுத்து மகாநதி, கீதாகோவிந்தம், நோட்டா, டாக்ஸிவால உள்பட பல திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை குறித்து தந்தது என்பதும், தற்போது அவர் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.