சினிமா
படம் ரிலீஸாகி ஒரு மாசமே ஆகல; அதற்குள் வாரிசு, துணிவு ஹெச்டி பிரின்ட்டே லீக் ஆகிடுச்சு!

தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்தின் துணிவு உள்ளிட்ட படங்கள் வெளியாகி இன்னமும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில், துணிவு மற்றும் வாரிசு படங்களின் ஹெச்டி பிரின்ட் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படம் வெளியானது. அதே நாளில் அதிகாலை 4 மணிக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் பயங்கர ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகின.

#image_title
ஆனால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வலிமை மற்றும் பீஸ்ட் படங்களை போலவே துணிவு மற்றும் வாரிசு படங்கள் ரசிகர்களை வச்சு செய்து அனுப்பின.
வாரிசு திரைப்படம் 280 கோடி வரை கலவையிலான விமர்சனங்கள் உடன் வெளியான நிலையில், வசூல் அஜித்தின் துணிவு திரைப்படம் வெறும் 190 கோடி மட்டும் தான் உலகளவில் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை தயாரிப்பாளர் போனி கபூர் 100 கோடி வசூலை கடந்ததாக கூட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title
வரும் பிப்ரவரி 8ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி வெப்சைட்களில் வெளியாகி உள்ளது.
மேலும், விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ஓடிடி அறிவிப்பு கூட வெளியாகாத நிலையில், அந்த படத்தின் ஹெச்டி பிரின்ட்டும் லீக் ஆகி படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.