சினிமா
லியோ படத்தில் ஏஜென்ட் டினாவா? விமான வீடியோவால் இன்னொரு க்ளூ கொடுத்துருக்காரா லோகேஷ் கனகராஜ்?

தளபதி 67 படத்திற்கு லியோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக வெளியான அப்டேட்டில் ஸ்பைஸ்ஜெட் தனி விமானத்தில் விஜய், த்ரிஷ, லோகேஷ் கனகராஜ் என ஒட்டுமொத்த படக்குழுவும் பறந்து சென்ற வீடியோவையே செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அந்த வீடியோவில் விக்ரம் படத்தில் எஜென்ட் டினா கதாபாத்திரத்தில் நடித்த நடனக் கலைஞர் வசந்தியும் இடம்பெற்றிருந்த நிலையில், ஏஜென்ட் டினா ரிப்போர்ட்டிங் சார் என நிச்சயம் இந்த படம் எல்சியூ தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

#image_title
தளபதி 67 படத்தின் பூஜையில் கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் கலந்து கொண்டதை வைத்தும் இந்த படம் எல்சியூ என ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், ஏஜென்ட் டினாவும் இணைந்துள்ளது ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

#image_title
தளபதி 67 படமான லியோ தனிக்கதை என்றும் டான்ஸ் கொரியோகிராபிக்காக டினா சென்றிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விக்ரம் படத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் லியோ படத்தின் கதை இருக்குமா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.