சினிமா
வீட்டு வேலை செய்பவர்கள் காலில் கூட விழுவேன்: ராஷ்மிகா மந்தானா!

நடிகை ராஷ்மிகா மந்தானா தனது வீட்டில் இருப்பவர்கள் காலில் கூட விழுவேன் என சொல்லி இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. தமிழில் கடைசியாக விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் ரன்பீருடன் அனிமல் படத்தை முடித்துவிட்டு வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனக்கு இருக்கக்கூடிய ஒரு வினோதமான பழக்கம் பற்றி ராஷ்மிகா மனம் திறந்து உள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ” வாழ்க்கையில் எனக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட முக்கியமாக இருக்கும்.
காலையில் எழுந்தவுடன் என் செல்ல பிராணிகளுடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவேன். எனக்கு வார்த்தைகள் மிகவும் முக்கியமானது. அதனால் நான் யாரிடமும் பார்த்து பேசுவேன். எனக்கு வரும் வார்த்தைகளையும் கவனமாக கையாளுவேன். அதனால்தான் சமீபத்தில் கூட என் உடல் பற்றிய கேலி ஒருகட்டத்திற்கு மேல் என்னை மிகவும் பாதித்தது. சின்ன சின்ன விஷயங்களையும் டைரியில் எழுதி வைத்துக் கொள்வேன்.
அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நினைப்பேன். வீட்டில் இருக்கும் பொழுது என் வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் விழுந்து மரியாதை செய்வேன். வீட்டில் வேலை செய்பவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றாலும் அவர்கள் காலிலும் விடுவேன். இதில் எந்த வேறுபாடும் காட்ட மாட்டேன்” என்று ராஷ்மிகா கூறியுள்ளார். ராஷ்மிகாவின் இந்த குணம் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ரசிகர்கள் ராஷ்மிகாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.