சினிமா செய்திகள்
வந்தா ராஜாவாதான் வருவேன் டிரெய்லர் ரிலீஸ்!
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.
அண்டாவில் பால் கேட்டு சிம்பு வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த சர்ச்சைகளை மறக்கடிக்க வைக்க சிம்புவின் அதிரடி ஆக்ஷன் மற்றும் மாஸ் பன்ச் வசனங்களுடன் மாஸ் கமர்ஷியல் எண்டர்டெயினர் எனும் டேக் லைனுக்கு ஏற்றவாறு டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வருவதற்கு முன்னதாக, பேட்ட படத்திலும், சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் மூலம் திரையுலகிற்கு மேகா ஆகாஷ் அறிமுகமாகிவிட்டார்.
மேலும், இந்த படத்தில் கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, யோகி பாபு, ரோபோ ஷங்கர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
சுந்தர்.சி மூலம் அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை நல்ல பட்ஜெட்டில் தயாரித்து வெளியிடுகிறது.











