இந்தியா
தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட உபி முதல்வர் யோகி: கொரோனா பாதிப்பா?

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை தானே எடுத்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்படும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் உள்பட பலரையும் பாதித்திருக்கிறது. ஏற்கனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்பட பல அரசியல்வாதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீரென தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார். அவருடைய அலுவலக அதிகாரிகள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யோகி ஆதித்யநாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.
இருப்பினும் அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் முடிவு வந்த பின்னரே அவருக்கு கொரோனா உறுதி செய்யப் படுகிறதா? இல்லையா? என்று தெரிய வரும் என்றும் முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.
























