தமிழ்நாடு
பெங்களூரு-ஓசூர் மெட்ரோ ரயில் சேவைக்கு மத்திய அரசு அனுமதி!

பெங்களூரு – ஓசூர் இடையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்பது இருமாநில எல்லை ஓர மக்களிடம் இருந்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இந்த பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில் சேவையை பணிகளைத் தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதனால் பெங்களூரு – ஓசூர் இடையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பது குறித்த சாத்திய கூறுகள் பற்றி ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கும்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசு பெங்களூரு – ஓசூர் இடையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கான பணிகளுக்காக 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் வழித்தடத்தை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியைக் கோரியுள்ளது.
இவை முழுமை பெரும் போது தமிழ்நாட்டின் ஓசூர் – கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள பொம்மசந்திரா வரை அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதையும் இணைக்கப்படும்.
ஏற்கனவே டெல்லி – குர்காமில் இரண்டு மாநிலங்கள் இடையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.






















