டிவி
தொலைச்ச இடத்துல தான் தேடனும், தோத்த இடத்தில தான் ஜெயிக்கணும்: பிக்பாஸ் அல்டிமேட் புரமோ
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சேனல் ஒன்று விரைவில் ஒளிபரப்ப இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அதுகுறித்த புரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். 48 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் காரசாரமாக ஆவேசமாக விளையாடியவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ புரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் கமலஹாசன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து செட்டில் சில மாற்றங்கள் சொல்வதும் அதன் பின்னர் இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிக்கும் காட்சிகளும் உள்ளன.
மேலும் தொலைத்த இடத்தில் தான் தேடவேண்டும் என்றும், தோற்ற இடத்தில் தான் ஜெயிக்க வேண்டும் என்றும் கமலஹாசன் கூறுகிறார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை வெல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைச்ச இடத்துல தான தேட முடியும்..
தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்..
This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம #disneyplushotstar இல் மட்டுமே! ???? #BBUltimate pic.twitter.com/FIs7O3GUky— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 17, 2022