டிவி
சித்ராவின் தற்கொலைக்கு இவர்கள் இருவர் தான் காரணம்.. காவல் துறையினர் அதிர்ச்சி தகவல்!

இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி நடிகை சித்ரா, தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை அதிகாலை தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று வியாழக்கிழமை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சித்ராவின் கணவர் மற்றும் தாய் இருவரும் கொடுத்த மன அழுத்தமே தற்கொலைக்குக் காரணம் என்று காவல் துறையினர் இன்று காலை தெரிவித்துள்ளனர்.
சித்ராவின் காதல் கணவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சித்ராவின் போனில் செய்யப்பட்ட அரட்டைகள் உள்ளிட்ட தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
எனவே சித்ராவின் போன் சைபர் காவல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர் கடைசியாக யாருடன் எல்லாம் செயலிகள் மூலம் உரையாடியுள்ளார் என்ற விவரங்கள் கிடைக்கும்.
பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா அடித்துக் கொலை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது நிம்மதி என்றாலும், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என்று சித்ராவின் தந்தை தெரிவித்துள்ளார்.

















