தமிழ்நாடு
1500ஐ நெருங்கியது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1500ஐ நெருங்கி உள்ளதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முகக்கவசம் கட்டாயம் மற்றும் கோவிட் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,461
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,69,805
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 543
செங்கல்பட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 240
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 0
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 38,026
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 697
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 34,23,557
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 24,971
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,70,69,035