தினபலன்
இன்றைய ராசிபலன் – 17 பிப்ரவரி 2025

மேஷம்: வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வீடு, நிலம் தொடர்பான தொழில் சிறக்கும். பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும். பண வரவு உயரும். நீண்டநாள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
ரிஷபம்: பூர்வீகச் சொத்து கைக்கு வந்தடையும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த நேரம் கைகொடுக்கும். யாரிடமும் விவாதம் தவிர்க்கவும். தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
மிதுனம்: புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்; அவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். உடல் உழைப்பு அதிகரிக்கும்.
கடகம்: கணவன்-மனைவியிடையே அன்பு மேலோங்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு பலப்படும். புதிய வீடு உற்சாகத்தைக் கொடுக்கும். நீண்டதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் திட்டமிட்டு படித்து சிறந்து விளங்குவர்.
சிம்மம்: ஆன்மீகப் பணிகள் சிறக்கும். மனைவி வீட்டாருடன் நல்லுறவு ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தலைவிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பட்டா மாற்றுதல் நடைபெறும். மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெற்றோரின் உடல்நலம் சிறக்கும்.
கன்னி: விவசாயிகள் விளைச்சலை அதிகரிப்பர். உடல்நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு கணவர் வீட்டாரின் நன்மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வி முன்னேற்றம் கண்டு பெற்றோர் மகிழ்வர். வியாபாரிகள் வங்கி நிதி உதவியால் முதலீட்டை அதிகரிப்பர். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படுவர்.
துலாம்: நல்ல விஷயங்களில் திருப்பம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். உடல்நலம் மேம்படும். தொழிலில் ஆர்வம் கூடும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். வருவாய் திருப்தியளிக்கும். வீடு கட்டும் வாய்ப்பு உள்ளது. தேவைகள் நிறைவேறும்.
விருச்சிகம்: பணத்திற்கு குறைவு ஏற்படாது. நிலப்பதிவு செய்வீர்கள். சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகளின் எண்ணம் பலிக்கும். சொத்துப் பிரச்சினை தீரும். சேமித்த பணத்தில் பொன்னகை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செய்வீர்கள்.
தனுசு: உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர். உடல்நிலையில் பாதிப்பு வராது. மனம் உற்சாகமுடன் இருக்கும். தம்பதிகள் ஒற்றுமையாக நடந்து கொள்வர். பங்குச் சந்தையால் பணம் அதிகரிக்கும்.
மகரம்: இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வீர்கள். பணம் பல வழியிலும் வந்து சேரும். பெண்களின் சேமிப்பு உயரும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறும். அரசியல்வாதிகள் தலைமையின் இணக்கத்திற்கு உரியவராவர். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். மாணவர்களின் ஞாபகத்திறன் அபாரமாக செயல்படும்.
கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான நபர்களைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது சிறந்தது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
மீனம்: விவசாயிகள் நவீன கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

















