தினபலன்
இன்றைய ராசிபலன் (03 பிப்ரவரி 2025)

மேஷம்: நண்பர்களின் உதவியால் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த திட்டங்கள் வெற்றியடையும். திருமண வாழ்க்கையில் இருந்த தடைகள் விலகும்.
ரிஷபம்: பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். வேலைகளை முடிப்பதில் சாதகமான நாள். அரசு தொடர்பான வேலைகள் நிறைவேறி மகிழ்வீர்கள். வணிகத்தில் லாப வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்: தொழில் விஷயங்களில் கவனமாக செயல்படவும். ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம். தொண்டு, சேவை செய்வதில் நேரத்தை செலவிடுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
கடகம்: பரபரப்பான நாள். முக்கிய வேலைகளை முடிப்பதில் துணை ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பதட்டமான சூழல் இருக்கும். பிரச்சினைகளுக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம்: முக்கிய வேலைகளை முடிப்பதில் கவனம் தேவை. ஒரே நேரத்தில் பல விஷயங்களை கையாள வேண்டிய சூழல் இருக்கும். ஊக்கம் அளிக்கக்கூடிய செய்திகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி: பங்கு சந்தை அல்லது லாட்டரி தொடர்பான விஷயங்களில் லாபம் ஏற்படும். பழைய முதலீடுகள் மூலம் நன்மை அடைவீர்கள். குடும்ப விஷயங்களில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற வாய்ப்புள்ளது.
துலாம்: அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
விருச்சிகம்: புதிய தொழில், வியாபாரம் தொடங்க நினைப்பீர்கள். சகோதரர்களின் ஆலோசனை தேவைப்படும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நன்மை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.
தனுசு: வெகு தூர பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிக்கவும்.
மகரம்: சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கும் விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்: வணிகம் தொடர்பாக வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். சமூக சேவைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் பரிசு, பாராட்டு கிடைக்கும்.
மீனம்: தொழிலை விரிவு படுத்துவது தொடர்பாக கடினமான சூழல் உருவாகும். வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

















