தினபலன்
இன்றைய ராசிபலன் 01/ஏப்ரல்/2025

இன்று செவ்வாய்க்கிழமை, பங்குனி 18. பரணி நட்சத்திரம் பிற்பகல் 3:32 வரை உள்ளது, அதன்பிறகு கிருத்திகை நட்சத்திரம் தொடங்குகிறது.
மேஷம் (Aries)
பணியில் புதிய பொறுப்புகள் ஏற்படும். செயல்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் நன்மைகள் கிடைக்கும். மனநிலை அமைதியாக இருக்கும்.
ரிஷபம் (Taurus)
வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் (Gemini)
புதிய திட்டங்கள் வெற்றி பெறும். வழக்குகளைத் தவிர்க்கவும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
கடகம் (Cancer)
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்படலாம்.
சிம்மம் (Leo)
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆன்மிக பயணங்கள் யோசிக்கலாம். பழைய பிரச்னைகள் தீரும்.
கன்னி (Virgo)
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். எந்த காரியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம் (Libra)
முன் திட்டமிட்டு செயல்பட்டால் நன்மைகள் அதிகம். உடல்நலம் சீராக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.
விருச்சிகம் (Scorpio)
தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
தனுசு (Sagittarius)
சட்ட விஷயங்களில் சிக்கல்கள் குறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எதிலும் பொறுமையாக செயல்பட வேண்டும்.
மகரம் (Capricorn)
புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். புது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
கும்பம் (Aquarius)
பண விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம். தொழிலில் சில தடைகள் வந்தாலும், உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.
மீனம் (Pisces)
குடும்பத்தில் அமைதி ஏற்படும். மனதிற்கு பிடித்த காரியங்களில் கவனம் செலுத்தலாம். வழக்கு பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.






