Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/10/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

23-10-2020

வெள்ளிக்கிழமை

 

மேஷம்:

கிரகநிலை:

ராசியில்  சந்திரன், சூர்யன், புதன் – குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் –  தைரிய ஸ்தானத்தில் ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி –  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 

ரிஷபம்:

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ –  அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா)  – விரைய ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

 

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில்  ராஹூ –  களத்திர ஸ்தானத்தில் கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  லாப  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

 

கடகம்:

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  – தொழில்  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில்  சுக்ரன் –  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 

சிம்மம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, சனி –  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  பாக்கிய  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  –  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

 

கன்னி:

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  அஷ்டம  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் – பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

துலாம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, சனி – சுக  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – களத்திர  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் – அஷ்டம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 

விருச்சிகம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, சனி  –   தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – ரண ருண ரோக  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன்  – களத்திர ஸ்தானத்தில்   சுக்ரன் –  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

 

தனுசு:

கிரகநிலை:

ராசியில்  கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – பஞ்சம  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில்  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

 

மகரம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  சுக  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் – பஞ்சம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ  –  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

 

கும்பம்:

கிரகநிலை:

தைரிய  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன் – சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  –  லாப ஸ்தானத்தில் கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

 

மீனம்:

கிரகநிலை:

தன  ஸ்தானத்தில்   சந்திரன், சூர்யன், புதன்  –  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் –  சுக ஸ்தானத்தில்  ராஹூ –  தொழில்  ஸ்தானத்தில் கேது, சனி – லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

பலன்:

இன்று துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.  மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
discover luxury gulets, motor yachts, and catamarans in bodrum, gocek, marmaris, and fethiye.