Connect with us

வேலைவாய்ப்பு

TNPSC Group 4 தேர்வு 2025: 10ம் வகுப்பு போதும் – 3935 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

Published

on

TNPSC Group 4 2025: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம், தமிழ்நாடு அமைச்சுப் பணிகள், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், சிறு தொழில் கழகம் உள்ளிட்ட பல துறைகளில் 3935 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இடங்கள் நிரப்பப்படும் முக்கிய பதவிகள்:

  • கிராம நிர்வாக அலுவலர் (VAO)

  • இளநிலை உதவியாளர்

  • தட்டச்சர்

  • சுருக்கெழுத்து தட்டச்சர்

  • நேர்முக உதவியாளர்

  • பால் அளவையாளர்

  • வனக் காப்பாளர்

வயது வரம்பு விவரம்:

  • VAO, வனக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கு: 21 முதல் 32 வயது

  • பிற பதவிகளுக்கு: 18 முதல் 32 வயது

  • எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவைகள்: 37 வயது வரை தளர்வு

  • பிசி, எஸ்பிசி, பிடிஎம் பிரிவினர்: 34-37 வயது வரை தளர்வு

  • சில பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வி தகுதி:

  • குறைந்தபட்சமாக 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

  • இளநிலை உதவியாளர் பதவிக்கு பட்டப்படிப்பு தேவை.

  • தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு தொழில்நுட்ப தகுதி தேவை.

  • ஆய்வக உதவியாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், வனக்காப்பாளர் பதவிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tnpsc.gov.in/

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்கும் கடைசி நாள்: மே 25, 2025

  • திருத்தம் செய்ய கடைசி நாள்: மே 29 முதல் மே 31 வரை

  • தேர்வு தேதி: ஜூலை 12, 2025

10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு பணியில் சேரலாம். விரைந்து விண்ணப்பியுங்கள்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..