தமிழ்நாடு
நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
தமிழகத்தில் தற்போது தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.
இதேபோன்று மற்ற மாவட்டங்களுக்கும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


















