Connect with us

இந்தியா

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய இந்த ரயிலுக்கு போங்க.

Published

on

இந்தியாவில் பெரும்பாலும் நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல்கள் டிக்கெட் ஆப்கள் மற்றும் கடைசி நேர பயண பதட்டம் போன்றவற்றை நினைவுபடுத்துகிற விதமாகத்தான் ரயில் பயணங்கள் பொதுவாக இருக்கும்.

ஆனால், நம் நாட்டில் அமைதியாகத் தனித்து நிற்கும் ஒரு ரயில் சேவை இருக்கிறது  இந்த ரயிலானது டிக்கெட்டுகள், அபராதங்கள் அல்லது அறிவிப்புகள் எதுவுமின்றி இயக்கப் படுகிறது. இதை கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

இந்த விசித்திரமான ரயில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு இடையே தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் பயணப் பாதை, ஒரு வழக்கமான ரயில் பயணத்தை விட, மெதுவாக நகரும் ஒரு அஞ்சல் அட்டையைப் போன்ற உணர்வைத் தருகிறது. இது சட்லஜ் நதியைக் கடந்து செல்கிறது, சிவாலிக் மலைகளின் ஓரமாகப் பயணிக்கிறது. இது மெதுவாக செல்லும். மற்ற பயணிகள் ரயில்களைப் போலவே தெரியும். ஆடம்பர அடையாளங்கள் எதுவும் இல்லை.  மலைகள், நீர்நிலைகள் மற்றும் அமைதியான நகரங்கள் வழியாகச் செல்லும் எஃகு தண்டவாளங்கள் மட்டுமே உள்ளன. பயணிகள் அவசரம் ஏதும் இல்லாமல் நிதானமாக ஏறுகிறார்கள். டிக்கெட் கவுண்டர்கள் கிடையாது. இருக்கை எண்களுக்காக செல்போன்களைச் சரிபார்க்க வேண்டிய தில்லை. முதல்முறையாக இந்த ரயிலை பயன்படுத்துபவர்களுக்கு இவற்றை எல்லாம் பார்க்க மிகவும் விசித்திரமாக தோன்றும். ஆனால், உள்ளூர் மக்களுக்கு இந்த ரயில்  மிகவும் பழக்கப் பட்ட ஒன்று தான்

வழித்தடம் குறுகியதாக இருந்தாலும், கண்கொள்ளா காட்சிகளை வழங்குகிறது. இந்த ரயிலில் சென்றால் நதிக்கரைக் காட்சிகள், அடர்ந்த வனப் பகுதிகளை பார்த்து ரசிக்கலாம் பாறைகளில் செதுக்கப்பட்ட குறுகிய சுரங்கப்பாதைகள் வழியாக இந்த ரயில் செல்கிறது. சிறிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. உண்மையில் இந்த பயணம்  வரலாற்றின் ஊடான ஒரு பயணம் ஆகும்.

இந்த ரயிலின் பெட்டிகள் மரத்தாலான அலங்காரப் பொருட்களும், பழங்கால ஜன்னல்களும் கொண்டவையாக உள்ளன. இந்த ரயில் பெட்டிகளில் சில, சுதந்திரத்திற்கு முன்பும், எல்லைகள் மாறுவதற்கு முன்பும், நவீன ரயில் பயணம் பரவலாவதற்கு முன்பும் கட்டப்பட்டவை என்று சொல்லப்படுகிறது.

இந்த ரயில் சேவையை இன்னும் நம்ப முடியாததாக்குவது எது தெரியுமா? இந்த ரயிலில் பயணிக்க பயணக் கட்டணம் என்பதே துளியும் இல்லை. ஆம் டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட் கேட்டு அபராதம் விதிக்கமாட்டார். இந்த ரயில் இயங்க எரிபொருள் செலவாகிறது, பராமரிப்பு, ஊழியர்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள் செய்யப்படுகின்றன, ஆனாலும் பயணிகள் இதில் பயணிக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை

இந்த ரயில் இந்திய ரயில்வேயால் இயக்கப்படவில்லை. இந்தச் சேவையானது ஒரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசு அதிகார அமைப்பால் இயக்கப் படுகிறது. பல ஆண்டுகளாக இது தொடர்ந்து இலவசமாகவே இயங்கி வருகிறது. இந்த ரயிலின் பெயர் பக்ரா–நங்கல் (Bhakra–Nangal) ஆகும். இந்த ரயில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு இடையே 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

ஆரம்பத்தில் அணை கட்டுமானத்திற்காக இயக்கப்பட்ட இந்த ரயில், உள்ளூர் பயணிகளுக்கு (மாணவர்கள், கிராமவாசிகள்) ஆதரவளிக்கவும், வரலாற்றுச் சிறப்புமிக்க பக்ரா அணை சுற்றுலாவை ஊக்குவிக்கவும், வருமானம் ஈட்டும் சேவையாக இல்லாமல், ஒரு கலாச்சாரச் சின்னமாக பாரம்பரியத்தைப் பேணவும் தொடர்ந்து இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா12 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்12 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா13 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Tech computer company 是一家成立於 2000 年的專業電腦  it 解決案方  服務公司 。多年來,我們一直致力於為客戶提供最優質的電腦和技術解決方案。我們的服務範圍涵蓋住宅客戶、商業客戶和政府部門,為不同的客戶提供量身定制的服務。.