ஆரோக்கியம்
இது சைல்ட் லேபர் அல்ல….! இந்த குழந்தைகளுக்கு சம்பளம் என்ன தெரியுமா?
எறும்பைப் போன்ற சுறுசுறுப்புக்ககுப் பேர் போனவர்கள் ஜப்பானியர்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். உங்களுக்குத் தெரியாதது அங்குள்ள 4 வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் வேலை பார்க்கிறார்கள் என்பது.
நமது இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் வருமானம் ஈட்டக்கூடிய எந்த பணியிலும் பணியமர்த்தப்படக்கூடாது. அவ்வாறு செய்வது இந்திய குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது. பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் சிறிய அளவில் தொழில் செய்வோர் சிறு பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு தண்டனை வழங்கி அந்த குழந்தைகளை பள்ளிகளில் படிக்கச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் பல பெரிய பணக்காரர் வீட்டுக் குழந்தைகள் பல பெரிய நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்கும் போது அவற்றின் மீது எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இதுவரை நாம் கேள்விப்படவில்லை.
ஆனால் ஜப்பானில் அரசின் ஆதரவுடன் குழந்தைகளுக்கும் வேலை கொடுக்கின்றனர். குழந்தைகளால் என்ன வெலை செய்ய முடியும்? இதற்கு விடையாகத்தான் அவர்களுக்கும் ஒரு வேலையைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது தெற்கு ஜப்பானில் உள்ள கிட்டாகியுஷீ நகரில் உள்ள இச்சோவறம் மருத்துவமனை.
இந்த மருத்துவமனையில் குழந்தைகள் செய்ய வெண்டிய வேலை வயது முதிர்ந்த நோயாளிகளை தங்கள் குறும்புத் தனத்தால் மகிழ்விப்பதுதான். கூடவேதங்களை உறங்க வைக்க அந்த வயதான நோயாளிகளை அனுமதிப்பது.
குழந்தைகளின் குறும்புத் தனங்களை ரசிக்கும்போதும் அவர்களைத் துாங்க வைக்கும் போதும் வயதான நோயாளிகளின் மனம் ரிலாக்சாவதாக அந்த மருத்துவமனை கண்டறிந்தள்ளது. எனவே தங்களிடம் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளை உற்சாகப்படுத்த 32 குழந்தைகளை வேலைக்கு சேர்த்திருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான குழந்தைகள் போட்டி போட்டார்கள். என்பதும்.. இண்டர்வியு வைத்தே தேர்வு செய்தார்கள் என்பதும் சுவாரஸ்யமான ஐலைட். இந்த குழந்தைகளின் பணி நேரம் அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் வசதி சந்தர்ப்பங்களைப் பொறுத்தே அமைகிறது. இந்த நகரில் வயதானவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதும் குடும்பங்கள் சுருங்கிக் கொண்டே போவதும்தான் இத்தகைய குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இந்த குழந்தைகளால் தங்கள் உடலுக்குதெம்பும் மனதுக்கு புத்துணர்ச்சியும் வாழ்வில் ஒரு நம்பிக்கையும் ஏற்படுவதாக பல வயதான நோயாளிகள் கூறுவது நமக்கு வியப்பை அளிப்பதாகவே உள்ளது.1991 ம் ஆண்டிலிருந்தே பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுள்ள குழந்தைகள் வரை இங்கே இவ்வாறு பயன்படுத்தப்ப.ட்டு வருகின்றன.
இந்த குழந்தைகளுக்கு சம்பளம் என்ன தெரியுமா? பாலும் நாப்கினும்தான்.. அதுமட்டுமல்ல அவர்களுக்கு இலவச சந்தோஷமான போட்டோ ஷீட் அனுமதிகளும் அருகிலுள்ள கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ளவும் பொழுது போக்கு இடங்களுக்குச் செல்லவும் கூப்பன்களும் வழங்கப்படுகின்றன.