சினிமா செய்திகள்
அடுத்த பேட்மேன் பிரியங்கா சோப்ராவின் கணவரா?

பேட்மேன் படங்களுக்கு உலகம் முழுவதும் ஆதிகாலம் தொட்டே ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 13 பேட்மேன் வரிசை படங்களும் அதில், பல நடிகர்களும் பேட்மேனாக நடித்து கலக்கினர்.
கடைசியாக பென் அப்லெக், பேட்மேன் கதாபாத்திரத்தில் 2016ல் முதன் முறையாக பேட்மேன் vs சூப்பர்மேன் படத்தில் பேட்மேனாக அறிமுகமானார். அடுத்து வெளியான ஜஸ்டிஸ் லீக் படத்திலும் பேட்மேனாக அவரே நடித்திருந்தார்.
இந்நிலையில், 2021ல் வெளியாகவுள்ள அடுத்த பேட்மேன் படத்தில் இளைஞர் ஒருவரை பேட்மேனாக நடிக்க வைக்க படத்தின் இயக்குநர் தீர்மானித்துள்ளதால், பென் அப்லெக் இனி பேட்மேனாக நடிக்கப்போவதில்லை என டிசி அறிவித்தது.
இந்நிலையில், யார் அந்த புதிய பேட்மேன் என்ற கேள்வி ஹாலிவுட் முழுவதும் பரவியது. இந்நிலையில், சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்த அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த பேட் மேனாக நடிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா? என்ற கேள்வியையும், அதற்கு முதல் வார்த்தை நிக் மற்றும் கடைசி வார்த்தை ஜோன்ஸ் என தனது பெயரை அறிவித்துள்ளார்.
ஆனால், இவர்தான் அடுத்த பேட்மேனா அல்லது இது அவரது தனிப்பட்ட ஆசையா என்பதை அதிகாரப்பூர்வமாக டிசி தான் அறிவிக்க வேண்டும்.



















